பாரதியார் தினம் 

கவி பாரதி வித்யாலயா பள்ளியில் 11/12/2025 அன்று பாரதியார் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியை, மற்றும் தமிழ்த் துறை ஆசிரியர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். பாரதியாரின் வாழ்க்கை குறிப்புகளை மாணவர்கள் பாடல், நாடகம் மற்றும் பேச்சு வாயிலாகக் கலை நிகழ்ச்சிகளாக 
நிகழ்த்தி காண்பித்தனர். மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய பாரதியார் வரைபடத்தால்கள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன. மாணவர்கள் அனைவரும் பாரதியாரின் தமிழ்ப் பற்றை அறிந்து கொண்டதுடன் விழா இனிதே நிறைவடைந்தது.