காமராசர் தின விழா (2026-27)
காமராசர் பிறந்த நாள் விழா ஜூலை 15, 2026 அன்று காலை 8 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. விழாவில் காமராசரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதல்வர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்களும் தலைமை ஆசிரியர் திருமதி. காயத்ரி அவர்களும் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் விளக்கேற்றி மரியாதை செய்தனர். பிறகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலாவது நிகழ்ச்சியாகக் காமராசரின் சிறப்புப் பெயர்களைத் தாங்கிய பதாகைகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அழகாய் நடை பயின்றனர். பின்னர் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியாக ‘இவர்கள் சந்தித்தால்’ நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து வில்லுப்பாட்டு ஒன்றினை நிகழ்த்தினர். காமராசரின் நற்பண்புகளை வில்லுப்பாட்டு வடிவில் விரிவாக விளக்கினர். உயர்நிலை வகுப்பிலும் மாணவர் காமராசர் பற்றிய கவிதை ஒன்றினை அழகாய் வர்ணனையுடன் கூறினார்.
விழாவின் இறுதியாக இரண்டாம் வகுப்பு மாணவர்கள் காமராசர் பாடல் ஒன்றிற்கு அழகாய் நடனமாடினர். காமராசரின் சிறப்புகளைத் தாங்கிய வரைபடத்தாள்கள் பள்ளி வளாகம் முழுவதும் கட்டப்பட்டது. மாணவர்கள் அதனைப் படித்து காமராசர் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டனர். விழா இனிதே நிறைவடைந்தது மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர்.
Quick Links
- Homework
- Periodic test 10 marks with syllabus covered till announcement of the test dates by school.
- Note book submission 5 marks at term-end.
}
Periodic Assessment-20 marks
- Periodic test 10 marks with syllabus covered till announcement of the test dates by school.
- Note book submission 5 marks at term-end.














